Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் இன்று பிற்பகல் ஐந்து வயது சிறுமி கடத்தப்பட்டதை அடுத்து தந்தை உடனே பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தேடுதல் முன்னெடுத்த போது அவரது தாயாரால் ஆட்கள் வைத்து முல்லைத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது..

தாயாருடன் கிளிநொச்சி பொலீஸார் தொடர்பு கொண்டு சிறுமியுடன் சென்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

கடத்தல் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது,

முன்பள்ளியில் இருந்து சிறுமி தாத்தாவுடன் உந்துருளியில் வருகை தந்த போது பின்தொடர்ந்து வந்த சந்கே நபர்கள் உந்துருளியை தள்ளி விழுத்தி பின் சிறுமியின் தாத்தாவையும் தாக்கி விட்டே சிறுமியை கடத்தி சென்றுள்ளனர் என தெரிய வருகின்றது..

தாக்குதலுக்குள்ளான சிறுமியின் தாத்தா கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவமானது தந்தைக்கும் தாயக்கும் ஏற்பட்ட குடும்பப் பிணக்கு காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தாய் முல்லைத்தீவு கள்ளப்பாடு பிரதேசத்திலும் தந்தை கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்திலும் வசிக்கின்றனர். சிறுமி தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இதனாலையே சிறுமி கடத்தப்பட்டுள்ளார் என தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 Responses to கிளிநொச்சியில் ஐந்து வயது சிறுமி தாயாரால் கடத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com