இன்று 4வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், இன்று சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர்.
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மீனவர்கள் 21பேரை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்துள்ள 71 விசைப் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை செய்து வருகின்றனர்.
இன்றுடன் 4 வது நாளாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அங்கு ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

0 Responses to ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை தூதரகம் முற்றுகைப் போராட்டம்!