மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகரிடம் கூட்டணிக் குறித்து விஜயகாந்த் உறுதி அளிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்த பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்தித்து சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக உரையாற்றினார். அப்போது பிரகாஷ் ஜவடேகர், சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேர விஜயாகாந்துக்குக் கோரிக்கை வைத்ததாகத் தெரிய வருகிறது. அப்போது விஜயகாந்தும், ஜவடேகரிடம் சில முக்கியக் கோரிக்கைகளை வைத்ததாகத் தெரிய வருகிறது.
விஜயகாந்தின் கோரிக்கை குறித்து தலைமைக்கு தெரிவிப்பதாகத் தெரிவித்துச் சென்றார் பிரகாஷ் ஜவடேகர்.பின்னர் தேமுதிக வெளியிட்டுள்ள தகவலில் பஜகவுடனான கூட்டணிக் குறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றும், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் நடைப்பெற்றது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார் பஜகவுடனான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

0 Responses to பிரகாஷ் ஜவடேகரிடம் கூட்டணிக் குறித்து விஜயகாந்த் உறுதி அளிக்கவில்லை!