Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

1920 ஆம் ஆண்டு முதல் கணக்கெடுக்கப் பட்டு வரும் ஜப்பான் சனத்தொகையில் எண்ணிக்கை படுவேகமாகக் குறைந்து வருவது அவதானிக்கப் பட்டமை அந்நாட்டு அரசைக் கவலை அடையச் செய்துள்ளது. முக்கியமாக 2010 இலிருந்து 2015 இற்குள் சனத்தொகையில் மில்லியன் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது.

சனத்தொகை வீழ்ச்சியின் தாக்கத்தால் முக்கிய நகர்ப் பகுதிகளில் பல கடைகள் மூடப் பட்டும், கிராமங்கள் கை விடப் பட்டும் வருகின்றன. மேலும் ஜப்பானில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் சந்தைக்கு அதிக ஊழியர்கள் தேவைப் படுவதால் அதற்கேற்ற குழந்தைகளின் பிறப்பு வீதமும் எதிர்பார்க்கப் பட்டு வருகின்றது. இதனால் சனத்தொகை வீழ்ச்சி ஜப்பானின் தற்போதைய சனத்தொகையைத் தாண்டி 100 மில்லியனுக்கு குறையாது இருப்பது மிக முக்கியம் என ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் சனத்தொகை வீழ்ச்சி அங்கு முதியோர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பதும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to ஜப்பானில் படுவேகமாகக் குறைந்து வரும் சனத்தொகை!: அரசு கவலை

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com