Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இவ்வருடம் எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்த வண்ணமுள்ளன.

மேலும் முக்கிய கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இடையே போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கடும் போட்டி நிலவி வருகின்றது. எதிர்பார்க்கப் பட்ட பல வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது தென் கரோலினா பகுதியில் ஹிலாரி கிளிங்டன் வெற்றி பெற்றுள்ளார்.

ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு இறுதி வேட்பாளரான பெர்னியே கான் டெர்ஸ் இனை வீழ்த்தி ஹிலாரி கிளிங்டன் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பாகக் களம் இறங்கிய ஹிலாரி முன்னால் அதிபர் கிளிங்டனின் மனைவியும் முன்னால் வெளியுறவு மந்திரியும் ஆவார். மேலும் அண்மையில் லோவா, நிவேடா, நியூஹாம்சியர் மற்றும் தென் கரோலினா ஆகிய 4 மாகாணங்களில் நடைபெற்ற வேட்பாளருக்கான தேர்வில் 3 இல் வெற்றி பெற்றி ஹிலாரி தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குடியரசுக் கட்சி சார்பில் தீவிர வலதுசாரி கொள்கையுடைய டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதிக்கம் அதிகரித்து வருவதுடன், எதிர்க்கட்சிகள் சார்பில் அவரே பிரதான ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்படும் வாய்ப்பும் வலுப்பெற்று வருகிறது.

0 Responses to அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்வில் தென் கரோலினா பகுதியில் ஹிலாரி கிளிங்டன் வெற்றி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com