Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தண்டனைக்குரிய குற்றச்செயல்களை புரியும் வெளிநாட்டு பிரஜாஉரிமைகளை சுவிற்சர்லாந்திலிருந்து தன்னிச்சையாக நாடுகடத்தவேண்டுமெனக் கோரி சுவிற்சர்லாந்தின் தீவிர வலதுசாரி கட்சியான மக்கள் கட்சி கொண்டுவந்த பரிந்துரை பிரேரணை, இன்று சுவிஸ் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இன்று நடத்தப்பட்ட மிக முக்கிய மூன்று வாக்கெடுப்புக்களில், இந்தப் பிரேரணை மிக முக்கியத்துவம் பெற்றிருந்தது.

சுவிஸ் பிரஜாவுரிமை பத்திரமற்ற வெளிநாட்டவர்கள், (அவர்கள் சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும்) தண்டனைக்குரிய குற்றங்கள் செய்தால் அவர்களை உடனடியாக நாடுகடத்தவேண்டும் என்பதே அப்பிரேரணை. இரு வருடங்களுக்கு முன்னர் இப்பிரேரணை வலதுசாரிக் கட்சியால் முன்மொழியப்பட்ட போது 53% வீத மக்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

அதன் மூலம் கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் செய்த வெளிநாட்டவர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு சுவிற்சர்லாந்திலிருந்து நாடுகடத்தி வைக்கப்படும் நடைமுறை இப்போதே காணப்படுகிறது.

ஆனால் இதை இன்னமும் வலுப்படுத்தவேண்டும். கடும் தண்டனைக்குரிய குற்றங்கள் என்றில்லாது, பொதுவான எந்தக் குற்றங்களை செய்தவர்களாயினும் அவர்களை மறுகேள்வியின்றி நாடுகடத்தவேண்டும். அப்போது தான் சுவிற்சர்லாந்து வாழ் வெளிநாட்டவர்களுக்கு பயம் ஏற்படும். குற்றங்கள் குறையும் என்பதே தற்போது வலதுசாரி கட்சி கொண்டுவந்த புதிய பிரேரணை.

சுவிற்சர்லாந்தில் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் சுமார் 40% வீதமான பங்கு சுவிற்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டு பூர்வீகம் கொண்டவர்களின் கரங்களிலேயே தங்கியிருக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு எதிராக இப்புதிய பிரேரணை நிச்சயம் கடும் அநீதியை இழைக்கும் எனும் எதிர்க்கருத்து ஆதிக்கம் பெறத் தொடங்கியதை அடுத்து, இன்று நடைபெற்ற இப்பிரேரணைக்கான வாக்கெடுப்பு பெரும்பாலான சுவிற்சர்லாந்தில் மாநில மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

எனினும் சுவிற்சர்லாந்தின் கொதார்ட் பகுதியில் வாகன, பலசரக்கு வாகன போக்குவரத்துக்கென புதிய மலைக்குகை உருவாக்கப்படவேண்டும் என கொண்டுவரப்பட்ட பிரேரணை வெற்றி பெற்றுள்ளது. அதே போன்று சுவிற்சர்லாந்தில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களுக்காக ஊகவிலையில் பாரபட்சம் காண்பிக்கக் கூடாது என இடதுசாரிக் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட பிரேரணையும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

0 Responses to தண்டனைக்குரிய வெளிநாட்டவர்களை சுவிற்சர்லாந்திலிருந்து நாடுகடத்தவேண்டும் எனக் கொண்டுவரப்பட்ட பிரேரணை தோல்வி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com