Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று சனிக்கிழமை முதல் அமெரிக்கா மற்று ரஷ்யாவின் முயற்சியால் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் கிளர்ச்சிப் படை மீது சிரிய அரசு அல்லது எதிரணியினர் வான் வழித் தாக்குதல் மேற் கொண்டதாக சர்வதேச கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இவ்வமைப்பினரின் தகவல் படி சிரியாவின் முக்கிய பிரதேசங்களான அலெப்போ, தென் ரக்கா ஆகியவை வெள்ளிக்கிழமை முதற்கொண்டு வான் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் எத்தரப்பு முதலில் தாக்குதல் தொடுத்தது என்பதை அறிய முடியவில்லை. ரஷ்ய ஊடகங்களின் தகவல் படி தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்து 6 தாக்குதல்கள் தொடுக்கப் பட்டதாகத் தெரிய வருகின்றது. யுத்த நிறுத்தத்துக்கு முன்னர் அமெரிக்கா குர்துக்கள் உட்பட கிளர்ச்சிக் குழுக்களுக்கு மறைமுகமாக ஆயுதம் வழங்கி வந்த அதே நேரம் ரஷ்யா சிரிய அரசின் அதிபர் அசாத்துக்கு சார்பாகச் செயற்பட்டு வந்தது என்பது முக்கிய விடயமாகும்.

இந்நிலையில் நேற்று அமுலுக்கு வந்த போர் நிறுத்தத்துக்கு உடன் பட்டு சிரிய அரசுடன் மிதவாத எதிர்க்கட்சிகளும் 97 போராட்டக் குழுக்களும், அதிபர் அசாத்தின் கூலிப் படையும் ஆயுதங்களைக் கீழே வைக்க இணக்கம் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த போர் நிறுத்தத்துக்கும் சிரியாவிலும், ஈராக்கிலும் ISIS இற்கு எதிரான போருக்கும் ஒரு தொடர்பும் இல்லை என அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to சிரியாவில் போர் நிறுத்த அமுலின் மத்தியில் வான் தாக்குதல்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com