வடக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து, அவரை வரவேற்கும் நிகழ்வொன்று கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்திலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பாக 6 மாத காலங்களில் ஆய்வு செய்து தீர்க்கும்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய வடக்கு மாகாணத்திற்கு திரும்பிய பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டு அது தொடர்பில் நடவடிக்கைகளை கையாளவுள்ளேன்.
அதிகாரப் பகிர்விற்கு 13வது அரசியலமைப்பு திருத்தம் சிறந்ததொரு காரணியாக அமையும். 13வது அரசியலமைப்பு திருத்தத்திற்குள்ள தடைகளை நீக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரமே கடமையாற்ற முடியும்” என்றுள்ளார்.

0 Responses to வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் படிப்படியாக குறைக்கப்படும்: ரெஜினோல்ட் குரே