Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசு பதவியேற்ற நாள் முதல் ராஜபக்ஷக்கள் மீது அர்த்தமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி பழிவாங்கி வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆயினும், ராஜபக்ஷக்களின் அரசியல் பயணத்தினை யாரும் நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, "பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலையில் எனக்குத் தொடர்பு இருக்கின்றது என்றும், என்னைக் கைதுசெய்யப்போகிறார்கள் என்றும் புதிய வதந்தியொன்று பரவி வருகின்றது. இந்த மரணம் தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது. அதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது. இது எங்கள் மீது புதிதாகப் பூசப்படும் சேறு.

அர்த்தமில்லாத குற்றச்சாட்டுக்கள் மூலம் எங்கள் குடும்பத்துக்குத் தொடர்ந்தும் அவமானங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். உண்மை ஒரு நாள் வெளியில் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. எவ்வாறாயினும் எங்களது அரசியல் பயணம் தொடரும்.'' என்றுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசு பதவியேற்ற நாள் முதல் ராஜபக்ஷக்களை பழிவாங்குகிறது: நாமல் ராஜபக்ஷ

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com