Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) எதிர்வரும் 17ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்தத் தகவலை கூட்டு எதிரணியின் பிரதான அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின்போது, இராணுவத்திற்கு எதிரான செயற்பாடுகளை நிறுத்துமாறும், விவசாயிகளுக்கான நிவாரணங்கள் நிறுத்தப்பட்டமையை கண்டித்தும், உள்ளூராட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தக் கோரியும் பேரணியும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான மஹிந்த அணியின் போராட்டம் வரும் 17ஆம் திகதி ஆரம்பம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com