Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு மகசின் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டது. அதன்பின்னரே, உண்ணாவிரதிகளிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் காணாமற்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் சம்பந்தமான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்திவைப்பு பிரேரணை விவாதிக்கப்பட்ட பின்னர் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் முடிவொன்று எட்டப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்". என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகளிடம் உறுதி வழங்கியுள்ளது.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட த.தே.கூ கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com