Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

செவ்வாய்க் கிழமை இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ஆயிரக் கணக்கில் ஒன்று கூடி டேக்ஸி ஓட்டுனர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் வன்முறையானதை அடுத்து போலிசாரால் 83 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பல டேக்ஸி ஓட்டுனர்கள் மோட்டார் சைக்கிள் டேக்ஸி டிரைவர்களுடன் பழிவாங்கும் நோக்கில் தாக்கியதைத் தொடர்ந்தே வன்முறை ஆரம்பாகி இருந்தது.

கிராப் மற்றும் உபெர் என அழைக்கப் படும் வாகனங்களால் பாதிக்க படும் டேக்ஸிக்கள், 3 சக்கர பஜாஜ் வண்டிகள் மற்றும் பொதுமக்கள் வேன்கள் போன்றவற்றின் 10 000 ஓட்டுனர்கள் ஜகார்த்தாவில் கூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதத்தில் நடைபெறும் 2 ஆவது பாரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். ஆனால் முன்னர் நடந்ததை விட இம்முறை 5 மடங்கு அதிக டேக்ஸி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்களைப் பரிசோதிக்க இராணுவமும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

PPAD எனப்படும் டேக்ஸி ஓட்டுனர்கள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப் பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் பிரதான நோக்கமே இந்தோனேசியாவில் மோட்டார் சைக்கிள் டேக்ஸி டிரைவர்களை அகற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தோனேசியாவில் டேக்ஸி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம் வன்முறையானது!: 83 பேர் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com