Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் மேற்குலக நாடுகளின் பெரும் முயற்சியால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் பெரும்பான்மை வாக்குப் பலத்தால் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப் பட்டிருந்ததுடன் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றுவது என்றும் இணக்கம் எட்டப் பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தின் போது அமெரிக்க எதிர்க் கட்சிகள் மற்றும் காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி அதிபர் பாரக் ஒபாமா தனது சொந்த அதிகாரத்தின் அடிப்படையில் இதை செல்லுபடியாக்கி இருந்தார். ஆனால் அமெரிக்க குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என்றும் ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். ஈரானுடனான G8 நாடுகளின் ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் மீதான தற்போதைய ஒப்பந்தம் அதன் இராணுவ அணுவாயுத நிலைகளைத் தகர்ப்பதாக இல்லாததால் ஈரான் வருங்காலத்தில் நிச்சயம் அணுவாயுதம் தயாரிக்கும் என்றும் இந்த உறுதியற்ற ஒப்பந்தத்தை தாமதம் இன்றி தகர்க்க வேண்டும் என்றும் சூளுரைத்த டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அனுமதித்தது தொடர்பில் ஐ.நா சபையையும் கடுமையாகச் சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈரான் அணு ஒப்பந்தத்துக்கு எதிராக குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கருத்து

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com