கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்தும் 14வது நாளாக ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, உண்ணாவிரதிகளில் பலருக்கு சிறுநீருடன் குருதி வெளியேறும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில், நால்வர் ஏற்கனவே சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்த அவர், அவர்களின் விடுதலை விரைவில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்தோடு, தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் மனநிலை மற்றும் கோரிக்கையை மிகவும் வேதனையுடன் தெரிவித்தாகவும், அவர்களின் மனநிலையை உணர்வை தன்னால் புரிந்துகொள்ள கூடியதாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமாக பாதிப்பு; சிறுநீருடன் குருதி வெளியேறுகின்றது!