Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வைத்து சிஐஏ இனால் சுற்றி வளைக்கப் பட்டுக் கொல்லப் பட்ட அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரைப் பற்றித் தெரியாத விடயங்கள் தான் பல அவ்வப்போது வெளியாகி வருகின்றது.

நியூயோர்க்கில் இருந்த உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரத்தை விமானங்கள் மூலம் தகர்க்கத் தெரிந்த பின்லேடன் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த பின்னர் அமெரிக்காவின் டிரோன் விமானங்கள் மற்றும் உளவாளிகள் குறித்து மிகுந்த அச்சத்துடன் இருந்துள்ளார். மேலும் அமெரிக்க உளவாளிகள் குறித்தும் அவர் கலக்கத்தில் இருந்ததால் தான் பாகிஸ்தானில் மறைந்து இருந்தார் என்றும் புதிய செய்திகள் ஊடகங்களில் பரவியுள்ளன.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பின்லேடன் வைத்திருந்த சொத்தின் மதிப்பு வெறும் $29 மில்லியன் டாலர்கள் என்றும் இதைவிட பின்லேடன் கொல்ல பட்ட பின்னர் அல்கொய்தாவின் ஏனைய தலைவர்களையும் இதே அச்சம் பீடித்திருப்பதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். செப்டம்பர் 11 ஆம் திகதி 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவை உலுக்கிய உலக வர்த்தக மைய கட்டடம், பெண்டகன் மீதான தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் ஈராக் மீதான யுத்தம் தொடங்கியது. இத்தாக்குதலைத் திட்டமிட்டவனாகக் கருதப் படும் அல்கொய்தாவின் சக்தி வாய்ந்த தலைவனான பின்லேடன் இறுதியில் 2011 மே மாதம் பாகிஸ்தானின் அபொட்டாபாட் இலுள்ள ஓர் கட்டடத்துக்குள் ஒழிந்திருந்த போது சிஐஏ இன் வழிகாட்டுதலுடன் சுற்றி வளைக்கப் பட்டு அமெரிக்கத் துருப்புக்களால் சுட்டுக் கொல்லப் பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2008 ஆம் ஆண்டு பின்லேடன் தனது தந்தைக்கு எழுதிய கடிதம் உட்பட அவனது தகவல் தொடர்புகள் சிலவும் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

0 Responses to டிரோன் விமானங்களுக்கும் உளவாளிகளுக்கும் மிகவும் அச்சம் கொண்டிருந்தாரா பின்லேடன்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com