விண்வெளியில் மிக நீண்ட காலமாகத் தங்கியிருந்த அமெரிக்க வீரர் ஸ்காட் கெல்லி பூமி திரும்பியுள்ளார். சுமார் 340 நாட்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான (ISS) இல் தங்கி ஆய்வு செய்த ஸ்காட் கெல்லி உட்பட 3 விண்வெளி வீரர்கள் இன்று புதன்கிழமை பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
ரஷ்யாவின் சோயுஷ் ஒடம் மூலம் கஜகஸ்தானின் கசாக் என்ற இடத்தில் இவர்கள் பத்திரமாகத் தரையிறங்கினர். இவர்கள் முறையே நாசாவின் ஸ்காட் கெல்லி மற்றும் ரஷ்யாவின் மைக்கேல் கோர்னேன்கோ, செர்ஜரி வால்கோவ் ஆகியோரே இவ்வாறு தரையிறங்கியுள்ளனர். புவி ஈர்ப்பு விசையின் வித்தியாசம் உடலில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை சமாளிக்க இவ்வீரர்கள் அனைவரும் உடனே மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். இதேவேளை ஸ்காட் கெல்லி பூமியை வந்தடைய முன்னர் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அதிபர் ஒபாமாவுடன் பேசிய வீடியோ மற்றும் பூமியை வந்து சேர்ந்த பின் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப் படும் வீடியோ ஆகியவை CNN போன்ற ஊடகங்களிலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களிலும் வெளியாகி உள்ளன.
வீடியோக்களைப் பார்ப்பதற்கான CNN இணைப்பு:
http://edition.cnn.com/2016/03/01/us/astronaut-scott-kelly-one-year-mission-ending/index.html
நன்றி:தகவல், வீடியோ சிஎன்என்

0 Responses to விண்வெளியில் நீண்ட காலமாகத் தங்கியிருந்த அமெரிக்கர் ஸ்காட் கெல்லி பூமி திரும்பினார்!