Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நளினிக்கு ஒரு நாள் பரோல் வழங்கி உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியின் தந்தை கடந்த மாதம் 23ம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது கடைசி சடங்குகளுக்கு சிறையில் இருந்து வெளிவந்த நளினி, தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டார்.இதையடுத்து தந்தையின் 16 வது நாள் காரியங்களுக்கு தம்மை 3 நாள் பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இன்று மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை என்று ஒரு நாள் பரோல் வழங்க நீதிபதி மாலா உத்தரவுப் பிறப்பித்துள்ளார். நளினி இன்று அதாவது 8ம்திகதி மற்றும் 9, 10 திகதிகளுக்கும் என்று 3 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to நளினிக்கு ஒருநாள் பரோல் வழங்கி உள்ளது நீதிமன்றம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com