Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றது போல ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், கடத்தல்கள் மற்றும் கொலை போன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறாது என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

'பனையோலையும் எழுத்தாணியும் ஒன்றாய் இணையும் நல்லிணக்கப் பயணம்' எனும் தலைப்பில் தெற்கு ஊடகவியலாளர்கள் வடக்கிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தில் கலந்து கொண்டுள்ள ஊடகத்துறை அமைச்சர், யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, வெள்ளை வான்களில் கடத்தப்பட்டமை, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் இப்போது இடம்பெறுவதில்லை. ஊடக சுதந்திரத்தை நாங்கள் உறுதி செய்திருக்கின்றோம்.

எதிர்காலத்திலும் ஊடகவியலாளர்கள் அச்சமின்றி செயற்பட்டத்தக்க வகையில் எமது ஆட்சி நிர்வாகம் நடக்கும். ஊடகவியலாளர்களின் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். அதில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இருக்க மாட்டாது. ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருப்பதனால் பொதுமக்களுக்கு சரியான தகவல்களை கொண்டுசேர்க்கத் தக்க விதத்தில் ஊடக சுதந்திரத்தை உரிய முறையில் செயற்படுத்த ஊடகவியலாளர்கள் முன்வரவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to ஊடகவியலாளர்களுக்கு இனி அச்சுறுத்தல் இருக்காது; கயந்த கருணாதிலக்க யாழில் உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com