இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் தீர்வு காண உலகிலுள்ள முஸ்லிம் தேசங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ ஜோக்கோவி விடோடோ அண்மையில் ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதாவது குறித்த பிரச்சினையை ஒரு பகுதியாக நோக்காமல் முழுமையாக நோக்கி ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்து அதில் அனைத்து தேசங்களும் பங்குபெற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
முழு உலகமுமே குறித்த விடயத்தில் பாலஸ்தினத்தின் சரிவையே எதிர்பார்த்து இருப்பதாகவும் இஸ்ரேல் அங்கு நடத்தும் அரசியல் ஒருதலைப் பட்சமான சட்ட விரோதமான ஒன்று என்றும் உலகின் மிக அதிக முஸ்லிம்களைக் கொண்டுள்ள தேசமான இந்தோனேசியாவின் அதிபர் விடோடோ கவலை தெரிவித்துள்ளார். விடோடோ கோரிக்கை விடுத்த குறித்த மாநாட்டில் 57 முஸ்லிம் நாடுகளின் அதிகாரிகள் தலைநகர் ஜகார்த்தாவில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் இதில் மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஐ.நா பாதுகாப்புச் சபை அதிகாரிகளும் கலந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
மறுபுறம் சிரிய விவகாரத்தில் மார்ச் 14 ஆம் திகதி முதல் ஜெனீவா நகரில் சிரிய அரசு மற்றும் ஏனைய எதிரணி போராளிக் குழுக்களுக்கு இடையே சமாதானப் பேச்சுவார்த்தை மறுபடி ஒழுங்காகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 5 வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் சிரிய போரில் முதலாவது சமாதானப் பேச்சுவார்த்த அமெரிக்க ரஷ்ய தலையீட்டில் பெப்ரவரி 27 ஆம் திகதி ஏற்பாடாகி பின்னர் மீறப் பட்டிருந்தது. இந்நிலையில் ஜெனீவா பேச்சுவார்த்தைக்கு சுவிட்சர்லாந்துக்கு இரு தரப்பும் எப்போது வந்தடைய உள்ளன என்பது இன்னமும் தெரியவில்லை.

0 Responses to பாலஸ்தீன விவகாரத்தில் முஸ்லிம் உலகம் ஒன்றிணைய வேண்டும்!: இந்தோனேசியா