Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாளுக்கு நாள் சிரிய அகதிகள் விவகாரம் பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில் ஐரோப்பிய யூனியனின் கிரேக்கத் தீவுகளில் இருந்து துருக்கிக்குத் திரும்பும் அகதிகளுக்கான உதவித் தொகையை இரு மடங்காக மாற்றி சுமார் 6 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கி இருப்பதாக EU அறிவித்துள்ளது.

அண்மையில் சிரிய அகதிகளை துருக்கிக்குத் திசை திருப்புவது தொடர்பான அவசர மாநாடு புருஸ்ஸெல்ஸில் நடைபெற்ற போது துருக்கி அரசு தன்னால் அகதிகளை சமாளிக்க மேலதிகமாக 3 பில்லியன் யூரோக்கள் தேவை என்று கோரிக்கை வைத்ததை அடுத்தே இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. அதாவது இன்னும் 3 வருடங்களுக்கு துருக்கியில் தஞ்சம் அடைந்திருக்கும் அகதிகளைச் சமாளிக்க இந்த 6 பில்லியன் யூரோக்கள் அளிக்கப் படுவதாகத் தெரிய வருகின்றது. தற்போது துருக்கி குறைந்தபட்சம் 3 மில்லியன் அகதிகளுக்கு தனது நாட்டில் புகலிடம் அளித்துள்ளது. இதேவேளை கடந்த வருடம் 363 000 பேர் வரை ஐரோப்பாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதைவிட தினசரி 2000 அகதிகள் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்து கிரேக்கக் கடற்கரைப் பகுதிகளை வந்து சேர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இவர்களைக் கடத்தி வரும் ஆள்கடத்தல் குழுக்களைக் கைது செய்வதற்கும் ஐரோப்பிய யூனியன் உறுதி மொழி அளித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் உதவியைத் தவிர்த்து சிரிய அகதிகளுக்காக தனிப்பட்ட முறையில் துருக்கி அரசு $10 பில்லியன் யூரோக்கள் இதுவரை செலவழித்திருப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கிரேக்கத் தீவுகளில் இருந்து துருக்கிக்குச் செல்லும் சிரிய அகதிகளுக்கு இரு மடங்கு சலுகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com