மரியானா ஆழிக்குள் தான் சிக்குண்டிருப்பதாகவும், அதற்குள்ளிருந்து வெளிவருது கடினமானது என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில்(FCID), நேற்று வியாழக்கிழமை வாக்குமூலமொன்றைப் பதிவு செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இனி, என்னையும் வெளியில் விடுவார்களா தெரியவில்லை. இதுவும் மரியானா ஆழி போன்றதே. போகிறது மட்டுமே தெரியும். வெளியே வருவது கடினம். எப்போது வருவோம் என்று தெரியாது.” என்றுள்ளார்.
இந்தியாவின் பிரசித்தி பெற்ற 'க்ரிஸ் குரூப்' நிறுவனத்தினால், கொழும்பு நகருக்கு மத்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மாடிக் குடியிருப்பு மற்றும் பல்பொருள் அங்காடிக்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டமை தொடர்பிலான கொடுக்கல் வாங்கல் குறித்தே, நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 Responses to மரியானா ஆழிக்குள் சிக்குண்டிருக்கிறேன்; வெளியே வருவது கடினம்: நாமல்