Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சம்பளம் மற்றும் சிறப்புரிமைகள் போதாது என்று கூறி நாட்டை விட்டு வெளியேறாமல் எதிர்கால சந்ததியினருக்காக கல்விமான்களும், புத்திஜீவிகளும் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரச சேவை பொறியியல் சங்கத்தின் 39வது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எந்தவொரு துறையிலும் பிரச்சினைகள் காணப்படுகின்றபோதும், தனிப்பட்ட நன்மைகளைப் போன்றே நாட்டின் தேவைகளையும் இனங்காணுதல் அனைவரதும் பொறுப்பாகும்.

இலவசக் கல்வியைப் பெற்று சுதந்திரமாக நாட்டைவிட்டு வெளியெறுவதற்கான சந்தர்ப்பம் இலங்கையின் கல்விமான்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் உள்ளபோதும், உலகில் அபிவிருத்திப் பாதையில் பயணித்த எந்தவொரு நாட்டிலும் அவ்வாறான ஒரு சந்தர்ப்பம் காணப்படவில்லை.

எமது நாடு தற்போதுள்ள இடத்தினைப்பற்றி பின்னடையாது மனஉறுதியுடனும் விசுவாசத்துடனும் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு ஆகக்கூடிய பங்களிப்பை வழங்குதல் அனைவரதும் பொறுப்பாகும். பொறியியல், மருத்துவம் போன்றே நாட்டின் சகல துறைகளிலும் உருவாகியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு முன்னோக்கிச் செல்வதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபடுகின்றது.

அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ளப்படும் கடமைப் பொறுப்புக்களின்போது ஆரோக்கியமான மனிதர்களை உருவாக்குவதைப் போன்றே அவர்களுக்குத் தேவையான அறிவினை வழங்குவதும் பொறுப்பாகும். நாட்டின் இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் பலப்படுத்துவதற்கு முன்னெப்போதும் மேற்கொள்ளப்படாத பணியினை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to கல்விமான்களும், புத்திஜீவிகளும் எதிர்கால சந்ததிக்காக அர்ப்பணிக்க வேண்டும்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com