Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“என்னை அரசியலுக்கு அழைத்தவர்களில் நண்பரும், அமைச்சருமான மனோ கணேசன் முக்கியமானவர். அவர் கூட்டங்களைக் கூட்டி என்னை அரசியலுக்கு அழைத்து வந்தார்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் கூறியுள்ளதாவது, “நான் நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து வந்திருந்தேன். அதில் மண் அள்ளிக் கொட்டக் காரணமாயிருந்தவர்களில் ஒருவர் நண்பர் மனோ கணேசன் அவர்கள்.

மற்றவர்கள் தனிப்பட்ட முறையில் வலிந்தழைத்தார்கள் என்றால் நண்பர் மனோகணேசன் அவர்கள் கூட்டம் வைத்தே என்னை அரசியலுக்கு அழைத்தார். என் அமைதியைக் கெடுத்துவிட்டு அவர் இப்பொழுது அமைச்சராகி விட்டார்.” என்றுள்ளார்.

0 Responses to கூட்டம் கூட்டி என்னை அரசியலுக்கு அழைத்தவர் மனோ கணேசன்: சி.வி.விக்னேஸ்வரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com