முல்லைத்தீவு மாவட்டமானது கடந்த காலயுத்தத்தினால் பாரிய அழிவை சந்தித்து மீண்டெழுந்து வரும் மாவட்டமாகும்.
இந்நிலையில் பாரியளவில் அபிவிருத்தி காணவேண்டிய முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகள் வீதிகளில் படுத்துறங்கும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது எனவே உரியஅதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே மக்களின் எதிர்பாப்பாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயமாக காணப்படுகிறது இந்த விவசாயத்தினை மேற்கொள்ளும் விவசாயிகள் செல்லெனா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக நெல்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாரிய கஸ்ரங்களின் மத்தியில் கடன்பட்டு நகைகளை அடகு வைத்து நெற்செய்கையை மேற்கொண்டுவரும் நிலையில் அவர்களது வயல்நிலங்களை இயற்கை அழித்தது ஒருபுறமாக இருக்க காட்டுயானைகள் அட்டகாசம் புரிந்து ஒருபகுதி வயல்நிலங்களை அழிக்க பாரிய துன்பப்பட்டு காப்பாற்றி எடுக்கின்ற நெல்லினை உரியவிலையில் விற்கமுடியாத திண்டாட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அவ்வாறில்லையெனில் அந்த நெல்லினை காயவைத்து உரிய விலைக்கு விற்பதாயின் தமக்கு நெல்லு காயவிடக்கூடிய இடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரிதாக இல்லை எனவே விவசாயிகள் வீதியில் கொண்டுவந்து நெல்லினை காயவிட்டு வெய்யிலில் தாங்களும் காய்ந்து அந்த இடத்திலிருந்து நெல்லை காயவிட்டு எடுத்து செல்லும் வரை இரவு பனியிலும் வீதியில் படுத்துறங்கி நெல்லினை காயவைத்து எடுத்து சென்றும் நெல்லினை விற்பதற்காக வீதிகளில் தவம் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறு வீதியில் நெல்லினை காயவிடுவது வீதியால் செல்பவர்களுக்கு இடையூறாகவும் வீதி விபத்துக்களுக்கு காரணமாகவும் அமைகிறது.
எனவே இந்த அவலநிலையினை கருத்தில் கொண்டு காட்டுயானைகளை கட்டுப்படுத்த முயற்சி எடுப்பதோடு நெல்லினை காயவிடுவதற்காக தளங்களை அமைத்து தருவதோடு உரிய காலத்தில் விளைகின்ற நெல்லினை நியாய விலையில் கொள்வனவு செய்து விவசாயிகளை வாழவைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வரவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 Responses to முல்லைத்தீவு விவசாயிகள் வீதியில் படுத்துறங்கும் அவலநிலை