Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் அமெரிக்கா மற்றும் கியூபா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான உறவு புதுப்பிக்கப் பட்டு இரு நாட்டுத் தூதரகங்களும் தத்தம் நாடுகளில் திறக்கப் பட்டு இருந்தது.

இந்த உறவின் உச்சக் கட்டமாக அமெரிக்க அதிபர் ஒபாமாக கடந்த வாரம் கியூபாவுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியிருந்தார். இந்த விஜயம் பொதுமக்களால் எதிர்பார்த்த அளவுக்கு இரு நாட்டு உறவுகள் தொடர்ந்து வலுப்படுமா என்பதை நிறைவு செய்வதாக இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்

இந்நிலையில் கியூபாவின் முன்னால் அதிபரும், புரட்சித் தலைவருமான ஃபிடெல் காஸ்ட்ரோ ஒபாமாவின் விஜயம் குறித்து திங்கட்கிழமை பொதுமக்களுக்கான ஊடக அறிக்கையில் பேசியுள்ளார். இந்த உரையில் காஸ்ட்ரோ, சகோதரத்துவம் மற்றும் பங்கிடப் பட்ட வரலாறு குறித்த ஒபாமாவின் காட்டமான பேச்சும் கடந்த கால பகையை ஒதுக்கி விட்டு முன் வருமாறு அவர் விடுத்த அழைப்பும் கியூப மக்களுக்கு இதயத்தைத் தாக்குவதற்கு அதாவது மாரடைப்பை ஏற்படுத்துவதற்குப் போதுமானவை என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கியூபாவின் கம்யூனிச பத்திரிகையான கிரான்மா இல் வெளியான ஃபிடெல் காஸ்ட்ரோவின் உரையில், அன்பு சகோதரர் ஒபாமாவிடம் வேண்டிக் கொள்வது என்னவென்றால் எமக்கு உங்கள் ராஜ்ஜியத்தில் இருந்து எந்த ஒரு பரிசும் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கியூபாவுக்கான ஒபாமாவின் 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் 89 வயதாகும் கியூப புரட்சித் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஒபாமாவின் வார்த்தைகள் மாரடைப்பை ஏற்படுத்துவதற்குப் போதுமானவை!: ஃபிடெல் காஸ்ட்ரோ

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com