ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நீக்கியுள்ளமை தொடர்பில் கூட்டு எதிரணி மிகுந்த ஏமாற்றமும் ஏரிச்சலும் அடைந்துள்ளது.
குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த நடவடிக்கை பெருமளவும் விசனப்பட வைத்துள்ளது. இதனையடுத்து, அவர், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டவர்களை பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள தனது மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துப் பேசியுள்ளார்.
இதன்போது, காமினிலொக்குகே, ரோகித்த அபேகுணவர்தன உள்ளிட்ட மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேனவின் இந்த முடிவானது தவறான முன்னுதாரணமாகும் என இதன்போது சுட்டிக்காட்டிய மஹிந்த ராஜபக்ஷ, இவ்வாறான நடவடிக்கை அரசியல் பழிவாங்கலின் மற்றுமொரு பாகம் என்றும் விமர்சித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு துணைபோவதால் புதியதொரு அரசியல் கூட்டணிக்கு மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்க வேண்டும் என இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அவரிடம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தனர். சுதந்திரக் கட்சியிலிருந்து தாங்கள் வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எனினும், புதிய கட்சி குறித்து மஹிந்த ராஜபக்ஷ உறுதியான முடிவு எதனையும் அறிவிக்கவில்லை. அத்துடன், மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
சந்திப்பு முடிவடைந்த பின்னர் கருத்து வெளியிட்ட காமினி லொக்குகே, "தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எங்கு செல்வது? எனவே, புதியதொரு அரசியல் கட்சி தேவை என்பது இதன்மூலம் உணரப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இல்லாமல் எமது அரசியல் பயணம் இல்லை." என்றுள்ளார்.
"புதிய கட்சியா அல்லது புதிய கூட்டணியா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால், பலமானதொரு மாற்று சக்தி உருவாகும்'' என்று ரோகித்த அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மஹிந்த ஆதரவு சு.க அமைப்பாளர்கள் நீக்கம்; மைத்திரிக்கு எதிராக புது வியூகம் அமைக்க கூட்டு எதிரணி முனைப்பு!