Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருகை!

பதிந்தவர்: தம்பியன் 03 March 2016

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வந்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேசிய ஜனானயக் கட்சியின் கூட்டணியை இறுதி செய்து, அதிகாரப் பூர்வமாக அறிவிக்க பிரகாஷ் ஜவடேகர் சென்னை வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேமுதிகவை தேசிய ஜனநாயகக் கட்சியில் நீடிக்க பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.

கடந்த வாரம் சென்னை வந்தபோது விஜயகாந்தை சந்தித்தார் பிரகாஷ் ஜவடேகர். ஆனால், கூட்டணியில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், இது வெறும் மரியாதை நிமித்த சந்திப்பு என்று விஜயகாந்த் தெரிவித்தார். இந்நிலையில், இன்று மீண்டும் சென்னை வந்துள்ள பிரகாஷ் ஜவடேகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணிக்கு வலியுறுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to பிரகாஷ் ஜவடேகர் தமிழகம் வருகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com