Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நடிகர் சரத் குமார் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது, சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளது என்று, நடிகர் சங்கம் புகார் அளித்துள்ளது.

சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி மற்றும் பூச்சி முருகன் இருவரும் நடிகர் சரத் குமார் மீது புகார் அளித்துள்ளனர். அதில் நடிகர் சங்கத்தில் சரத்குமார் தலைவராக இருந்த போது அவர் பல கோடி ரூபாய் அளவு ஊழல் செய்துள்ளார் என்று தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து சரத்குமார் கூறுகையில், புகார் குறித்த முழு விபரமும் தெரிந்தவுடன் தமது கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.

0 Responses to நடிகர் சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல்: சரத்குமார் மீது குற்றச்சாட்டு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com