பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
குறித்த பிரேரணைக்கு எவரும் வாக்கெடுப்புக் கோராததால் திருத்தங்களுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
பிரேரணை நிறைவேற்றப்படும்போதும் ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதல முன்னணி (ஜே.வி.பி) உறுப்பினர்களும் சபையில் இருந்தனர். எனினும், கூட்டு எதிரணி (மஹிந்த அணி) என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு குறித்த தீர்மானங்களை எடுப்பதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இப்பிரேரணை மீதான விவாதம் ஜனவரி மாதம் 12ஆம் திகதி நடைபெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து பிறிதொரு தினத்தில் இவ்விவாதத்தைத் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் மீண்டும் விவாதங்கள் நடத்தப்பட்டன. எனினும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன ஆகியோர் ஜனவரி 12ஆம் திகதி திருத்தங்களை முன்வைத்திருந்தனர். இவர்கள் முன்வைத்த திருத்தங்கள் தொடர்பில் பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு அமைய அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இவ்வாறான நிலையில் கடந்த 23ஆம் திகதி குறித்த பிரேரணையில் உள்வாங்கப்பட்டுள்ள திருத்தங்கள் சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இருநாள் விவாதம் நடைபெற்றது. விவாதம் நடத்தப்பட்டபோதும் திருத்தங்கள் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருப்பதால் வாக்கெடுப்பை அடுத்த பாராளுமன்ற வாரத்தில் நடத்துவதாக பிரதமர் அறிவித்திருந்தார்.
பிரதமரின் அறிவிப்புக்கு அமைய நேற்றையதினம் இந்தப் பிரேரணை மீண்டும் விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நேற்றையநாள் விவாதத்தை ஆரம்பித்துவைத்தார். ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு கருத்துக்களையடுத்து இறுதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார். பிரதமரின் உரையைத் தொடர்ந்து சபைமுதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல பிரேரணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை முன்வைத்தார்.
குறித்த பிரேரணைக்கு அனுமதி வழங்குகிறீர்களா? என சபாநாயகர் சபையில் வினவினார். இதற்கு சபையிலிருந்த எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. சகலரும் இந்தப் பிரேரணையை ஆமோதித்ததையடுத்து, பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.
புதிய பிரேரணையின் பிரகாரம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்படும். இதில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட இருப்பதோடு அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். இதன் பிரதித் தலைவர்களாக ஏழு பேர் தெரிவுசெய்யப்பட இருப்பதோடு உபகுழுக்களும் நியமிக்கப்படவிருக்கின்றன. பிரதமர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நீதியமைச்சர், அரசியலமைப்பு சபையால் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் இதில் அங்கம் வகிப்பார்கள்.
அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வின்போது பிரதித் தவிசாளர்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதோடு உபகுழுக்களுக்கான உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இதன் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையாகவே இருக்கும்.
அரசியலமைப்பு தயாரிப்பு பணிகள் எவ்வாறு இடம்பெறவேண்டும் என்பதை அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டிருக்கும் பாராளுமன்றமே தீர்மானிக்கும். இதில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய அரசியலமைப்பு வரைபு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பின்னர் மக்களின் அனுமதிக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.

0 Responses to பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றம்!