Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கண்டி அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கரான கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் நேற்று புதன்கிழமை இரவு கண்டி வைத்தியசாலையில் காலமானார்.

நேற்று மாலை திடீரென மயக்கமுற்ற நிலையில் கண்டி போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 94 ஆகும்.

காலஞ்சென்ற மகாநாயக்க தேரர், கண்டி அஸ்கிரிய மகாநாயக்க முன்னாள் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த காலமானதையடுத்து, 21 ஆவது மகா நாயக்க தேரராக 2015 ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார்.

1922ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி பிறந்த இவர், 1936ஆம் ஆண்டு துறவரம் பூண்டு, 1941ஆம் ஆண்டு உபகம்பத நிலையை அடைந்தார். இவர், 1947 ராஜகீய பண்டித்த பட்டத்தைப் பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டு கஹவத்த பிரிவெனாவில் அதிபராக பணியாற்றியதுடன் பல்வேறு விகாரைகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார்.

கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அஸ்கிரிய பௌத்த விகாரையில் உபநாயக்க தேரராக பதவி வகித்து வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி அஸ்கிரிய பௌத்த விகாரையின் மகாநாயக்க தேரராக நியமிக்கப்பட்டு பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அஸ்கிரிய மகாநாயக்கர் கலகம ஸ்ரீ அத்ததஸ்ஸி தேரர் காலமானார்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com