Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லாகூரில் தீவிரவாதத் தாக்குதல் நடைப்பெற்றதை அடுத்து, தமது அமெரிக்கா, இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்தார் நவாஷ் ஷெரீப்.

நேற்று முன்தினம் பாகிஸ்தான் லாகூரில் உள்ள பூங்கா ஒன்றில் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 70க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் பாகிஸ்தானில் இன்னமும் பதற்றம் அடங்கவில்லை. இதற்கிடையில் இன்று அமெரிக்கா புறப்பட இருந்த நாவஸ் ஷெரீப் தமது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இன்று அமெரிக்கா மாநாட்டிலும், இதையடுத்து இங்கிலாந்து சென்று அங்கு மாநாட்டிலும் கலந்துக்கொள்ள நவாஸ் திட்டமிட்டு இருந்தார்.

வாஷிங்டனில் இந்திய பிரதமர் நரந்திர மோடியை ஷெரீப் சந்திப்பார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், இவரது பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. காரணம், பாகிஸ்தானில் இன்னமும் பதற்றம் நீடித்து வருகிறது என்றும், மக்களிடம் வானொலியில் நவாஸ் ஷெரீப் இதுக்குறித்து உரையாற்ற உள்ளார் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

0 Responses to அமெரிக்கா, இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்தார் நவாஷ் ஷெரீப்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com