Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் முக்கியஸ்தர் என்று கூறப்படும் அன்ரனி எமில்காந்தனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.

இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை மற்றும் ரெட் நோட்டீஸ் (சிவப்பு அறிக்கை) என்பன ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்றத்தில் ஆஜராவதாக அவரது சட்டத்தரணி மூலம் எமில்காந்தன் அறிவித்ததை அடுத்து, குறித்த பிடியாணை விலக்கிக் கொள்ளப்பட்டது.

எதுஎவ்வாறு இருப்பினும், சந்தேகநபர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை எனவும், இது பிரச்சினைகளை தோற்றுவிப்பதாகவும் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அரச தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, சந்தேகநபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அய்ரங்கனி பெரேரா உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபர் எச்சந்தர்ப்பத்திலும் நீதிமன்றத்தில் சரணடைய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த வழக்கை மே மாதம் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி தீர்மானித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினால் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கப்பட்டமை குறித்ததான வழக்கு விசாரணைகளின் போக்கிலேயே எமில்காந்தன் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

0 Responses to எமில்காந்தனுக்கு எதிராக மீண்டும் பிடியாணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com