Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களைக் கையாள்வதற்காக அறுவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இந்தக் குழுவில், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உப செயலாளர் மஹிந்த அமரவீர, சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி.திஸாநாயக்க, அமைச்சர் சரத் அமுனுகம, இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யப்பா அபேவர்த்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர். அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு விரைவில் நியமிக்கப்படவுள்ள புதிய செயலாளரும் குழுவில் உறுப்பினராக இணைக்கப்படுவார்.

0 Responses to சுதந்திரக் கட்சி மறுசீரமைப்புக்காக அறுவர் அடங்கிய குழு மைத்திரியால் நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com