Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக தேர்தல் விதிமுறைகளா அமலுக்கு வந்தன.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் திகதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி வெளியிட்டார். அதன் படி தமிழகம் மற்றும் புதுவைக்கு மே மாதம் 16ம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.வாக்கு எண்ணிக்கை மே மாதம் 19ம் திகதி நடைப்பெறுகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் மாதம் 22ம் திகதி தொடங்கலாம், வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஏப்ரல் மாதம் 29ம் திகதி. வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் மாதம் 30ம் திகதி நடைப்பெறும். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மே மாதம் 2ம் திகதி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திகதிகள் அறிவித்த நிலையில் உடனடியாக தேர்தல் விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன என்று தமிழகத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். உடனடியாக வாகன சோதனைகள் தொடங்கி உள்ளன. முறையான ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் செல்பவர்களையும் போலீசார் கண்காணித்து விவரம் கேட்டு வருகின்றனர். மொத்தம் 702 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன என்றும் தகவல் தெரிய வருகிறது

0 Responses to தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடி அமுல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com