Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே வார்த்தை யுத்தங்கள் வலுத்து உள்ளது.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரைக்கு நன்றி தெரிவித்து நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, சிலர் ஆள்தான் வளர்ந்து இருப்பார்கள், அவர்களுக்கு அறிவு வளர்வதில்லை என்றும், அவர்கள் எங்கும் தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா குறித்து தவறாக பேசி வருகிறார்கள் என்று அப்பட்டமாக ராகுல் குறித்து பேசினார்.

இதே போல நேற்று முன்தினம் ராகுல் காந்தி பேசுகையில், கறுப்புப் பணம் பதுக்கியவர்களை சிறையில் அடைப்போம் என்று கூறிய மத்திய அரசு இப்போது, அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் அவர்களுக்கு சலுகை அறிவித்துள்ளது என்று கூறியுள்ளார். இது பிரதமரின் fair & lovely திட்டம் என்றும், கருப்பை வெள்ளையாக்கும் முயற்சி என்றும் கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.

இதில் ராகுல்காந்தி இன வெறியைத் தூண்டும் வகையில் கருப்பு வெள்ளை என்று பேசியுள்ளார் என்று பாஜக தலைமைக் கொரடா, ராகுல் மீது புகார் கூறியுள்ளார்.

0 Responses to நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி, ராகுல் காந்தியிடையே கடும் தர்க்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com