நேற்று செவ்வாய்க்கிழமை ஈரான் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணையை ஏவிப் பரிசோதித்துள்ளமை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அண்மையில் சர்வதேசத்துடன் ஈரான் ஏற்படுத்திக் கொண்ட அணுசக்திக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்துக்கு முரணான செயல் எனக் கருதப் படும் இந்த ஏவுகணை சோதனையானது இராணுவப் பயிற்சியின் ஓர் அங்கம் என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த அணுசக்தி சோதனை குறித்து அறிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரசு ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை உறுதி செய்யப்படின் அதன் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு உரிய விளக்கம் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் அளிக்கப் பட வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை 14 ஆம் திகதி ஈரானுக்கும், ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 8 நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் இடையே அணுசக்திக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருந்தது. ஈரான் தனது பொறுப்பற்ற ஏவுகணை சோதனைகள் காரணமாக இந்த ஒப்பந்தம் ரத்து ஆகாது இருக்க முடிவு எடுக்க வேண்டி உள்ளது எனவும் அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.
இதேவேளை ஈரானின் ஏவுகணைப் பரிசோதனை மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்துத் தேவையற்ற செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் இது தொடர்பில் ஊடகங்களுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அமெரிக்க மாநில பேச்சாளர் மார்க் டோனெர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஈரானின் திடீர் ஏவுகணை சோதனை விவகாரம் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் முன் வைக்கப்படுமா?