மலேசியன் ஏர்லைன்ஸின் எம் எச் 370 விமானம் காணாமற் போய் இரு ஆண்டுகள் நிறைவொட்டியதை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் நாடு முழுதும் உறவினர்களாலும் மௌன அஞ்சலி அனுட்டிக்கப் பட்டது.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிப் புறப்பட்ட போது மாயமான குறித்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் எனவும் இதில் பயணித்த 239 பேருமே பலியாகி விட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்திருந்தது.
அண்மையில் தான் இந்து சமுத்திரத்திலுள்ள தீவு ஒன்றில் எம் எச் 370 விமானத்தின் இறக்கை கண்டு பிடிக்கப் பட்டது எனத் தகவல்களும் புகைப்படங்களும் வெளியான போதும் இது குறித்த உத்தியோக பூர்வ செய்திகள் இதுவரை வெளியாகவில்லை. மாறாக எம் எச் 370 விமானத்தின் விபத்தே நீண்ட காலத் தேடலுக்குப் பின்னும் உரிய ஆதாரங்கள் சிறிதும் கிடைக்காத உலகின் மர்மமான விமான விபத்தாகவும் அதிகம் பணம் செலவழித்துத் தேடப்பட்டு வரும் விபத்தாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த விமான விபத்து பற்றி ஆய்வு செய்து வரும் குழு அண்மையில் MH370 விபத்து குறித்து புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் கண்டு பிடிக்கப் பட்ட விமானத்தின் இறக்கைப் பாகம் எனக் கருதப் படும் சிதைவு பெறப்பட்ட சமுத்திரப் பகுதியில் தேடுதலை அதிகரிப்பது மட்டுமல்லாது ஏர் டிராபிக் ஆப்பரேஷன், விமான உறுப்பினர் விபரம், விமானத்தின் தரம் மற்றும் பாதுகாப்பு, விமான இயங்கு பொறிமுறை மற்றும் செய்மதித் தொடர்பு அடங்கலாக 8 பிரிவுகளில் MH370 பயணித்த பாதை இனம் காணப் படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை எம் எச் 370 விமான விபத்தில் பலியான தமது உறவினர்களுக்காக சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள லாமா கோயிலில் ஒன்று கூடிய குடும்பத்தினர் அங்கு கண்ணீர் சிந்திய வண்ணம் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

0 Responses to மலேசியன் ஏர்லைன்ஸ் எம் எச் 370 விமான மறைவு தினத்தில் புதிய அறிக்கை வெளியீடு!