வடக்கில் இன்னமும் இராணுவப் பிரசன்னம் தொடர்வதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகளாகிவிட்டன. இராணுவப் பிரசன்னத்தை படிப்படியாக குறைப்பது தான் முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய தூதுவர் பிரைஸ்ஸி ஜோன் ஹட்டக்சனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் பின்னர் உரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அவுஸ்திரேலிய தூதுவரின் யாழ். வருகையின் போது வடக்கு மாகாணத்திற்கு அவுஸ்திரேலிய அரசினால் தேவைப்படும் உதவித்திட்டங்கள் தொடர்பில் பரிசீலிக்க வந்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய அரசின் உதவித்திட்டங்கள் தொடர்பில் நான் ஒன்றைக் கூறினேன். மத்திய அரசு, அவுஸ்திரேலிய அரசு இணைந்து வடக்கு மாகாணத்திற்கு பல்வேறு உதவித்திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண அரசுக்கு இருக்கும் பங்கு சொல்லக்கூடியதாக இல்லை.
எங்கள் மக்களுக்காக செய்யும் போது மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களின் கருத்தை அறிந்து செய்வது தான் முறை என்று கூறிறேன். ஆனால் அதற்கு அவர் அரசாங்கத்துடன் அரசாங்கம் இணைந்து செய்வதாக தெரிவித்தார்.
அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் மக்களுடைய பிரதிநிதிகளை புறக்கணித்து மத்திய அரசின் சொற்படி செய்வது சரியில்லை என்றும் எங்களுடன் கலந்தாலோசித்து உதவித்திட்டங்களை செய்யுமாறு கேட்டிருந்தேன். அதற்கு அவர் அதனைத் தான் கருத்தில் எடுப்பதாகக் கூறிச் சென்றார்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கில் இராணுவப் பிரசன்னம் தொடர்வதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை: சி.வி.விக்னேஸ்வரன்