Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் கடந்த 22ம் திகதி தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் உயிரிழந்தார் தமிழர் ராகவேந்தர் கணேஷ் என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த ராகவேந்தர் கணேஷ், பெல்ஜியத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார்.அவர் பிரசல்சில் தீவிரவாதிகள் மெட்ரோ ரயில் தாக்குதல் நடத்திய போது, அந்த ரயிலில் பயணித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், இறந்தவர்கள் பெயரிலும், சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் பெயரிலும் ராகவேந்தர் பெயர் இடம்பெறவில்லை. இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை சார்பாக பெல்ஜியம் நாட்டுக்கான இந்தியத் தூதரிடம் ராகவேந்தர் குறித்த விவரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், ராகவேந்தர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்ததை பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதர் உறுதி செய்துள்ளார்.அவரது உடல் விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட உள்ளது.ராகவேந்தரின் பெற்றோர் மும்பையில் வசிப்பதால், அவரது உடல் சென்னைக்கு வருமா, இல்லை மும்பைக்கு கொண்டு செல்லப்படுமா என்கிற விவரம் இன்னமும் தெரியவில்லை.

0 Responses to பிரசல்ஸ் தாக்குதலில் உயிரிழந்தார் தமிழர் ராகவேந்தர் கணேஷ்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com