Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்கிற விஜயகாந்த் அறிவிப்புக்கு வைகோ, திருமாவளவன்,தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பலத்தைக் கூட்டுவதற்காகத்தான் தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தோமேத் தவிர பலத்தை நிரூப்பிப்பதற்காக இல்லை என்றும் கூறியுள்ள பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஊழல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை ஒழிக்க அவர் தனியாக களம் இறங்க நினைப்பது வரவேற்கத் தக்கது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வாக்குக்களை அள்ளி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்கிற விஜயகாந்தின் முடிவு வரவேற்கத் தக்கது என்றும், விஜயகாந்தின் கொள்கையை கொச்சைப் படுத்தும் வகையில் நாளிதழ்களில் 59 சீட்டுக்கு விலை போய்விட்டார் என்கிற அறிவிப்பு இருந்தது என்றும் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

0 Responses to தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்கிற விஜயகாந்த் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com