Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விமானப்படைக்கு பைலட் பயிற்சி எடுக்கும் பெண்கள் நான்கு வருடங்களுக்குத் தாய்மைப் பேறு அடைய வேண்டாம் என்று, விமானப்படைத் தளபதி அறிவுறுத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் முதன் முறையாக போர் விமானங்களை இயக்க மூன்று இளம் பெண்கள் தேர்வாகி, அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை விமான தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.பயிற்சி மற்றும் பணிகள் பாதிக்கும் என்பதால் குறைந்தது 4 வருடங்களுக்கு தாய்மைப் பேறு அடைய வேண்டாம் என்று விமானப்படைத் தளபதி இவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிய வருகிறது.

பைலட் பயிற்சி பெற்று வரும் இந்த மூன்று பெண்களும் ஜூன் 18ம் திகதி பணியில் சேர்வார்கள் என்று தகவல் தெரிய வருகிறது.

0 Responses to விமானப்படைக்கு பைலட் பயிற்சி எடுக்கும் பெண்களுக்கு நான்கு வருடங்களுக்குத் தாய்மைப் பேறு வேண்டாம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com