தங்களது சம்பளப் பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கிங் ஃபிஷர் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனம் கடன் மற்றும் ஊழியர்களின் சம்பளப் பாக்கி காரணமாக அதன் சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது வங்கிகளில் வாராக்கடன்கள் என்று விஜய் மல்லையா 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக திரும்ப செலுத்தாமல் வைத்துள்ளார். இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிங் ஃபிஷர் மும்பை விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பல மாதங்களாக வழங்காமல் இருந்த தங்களின் சம்பளத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், தங்களது சம்பள பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, தங்களது பல மாத சம்பளத்தை விஜய் மல்லாயாவிடம் இருந்து பெற்றுத்த தர வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர்.

0 Responses to சம்பளப் பாக்கி விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: கிங் ஃபிஷர் ஊழியர்கள் கோரிக்கை!