தந்தையின் ஈமச் சடங்குகளுக்காக ஒரு நாள் பரோலில் வெளிவந்த நளினி இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் சிறைக்குத் திரும்புகிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தணடனை அனுபவித்து வரும் நளினியின் தந்தை அண்மையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துக்கொள்ள காலை முதல் மாலை வரை பரோலில் வெளிவந்த நளினி, தந்தையின் ஈமச் சடங்கில் கலந்துக்கொள்ள 3 நாள் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.சென்னை உயர் நீதிமன்றம் நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை என்று ஒரு நாள் பரோல் வழங்கி உத்தரவுப் பிறப்பித்தது.
இருப்பினும் இந்த உத்தரவு சிறைத்துறைக்குத் தாமதமாகச் சென்றதால், நளினி சிறையை விட்டு வெளியில் வர மாலை 6 மணி ஆனது. அதற்குப் பின்னர் வேலூரில் இருந்து சென்னை கோட்டூர் புரத்துக்கு வந்த அவர், இன்று தந்தையின் ஈமச் சடங்குகளில் கலந்துக்கொண்டு இன்று மாலை மீண்டும் சிறைக்குத் திரும்ப உள்ளார்.

0 Responses to பரோலில் நேற்று மாலை வெளிவந்த நளினி இன்று சிறை திரும்புகிறார்!