கூட்டணிக் குறித்த கேள்விக்கு,பழம் கனிந்துள்ளது பாலில் எப்போது விழும் என்று தெரியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்றுடன் முடிவடைந்துள்ளது.அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதியிடம், தேர்தலுக்கான திமுக, தேமுதிக கூட்டணிக் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்று கேள்வி எழுப்பினர். அப்போது பழம் கனிந்துள்ளது எப்போது பாலில் விழும் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.
ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்றும், நிச்சயம் திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றும் கருணாநிதி மேலும் கூறியுள்ளார்.திமுகவின் வேட்பு மனு விநியோகத்தின் மூலம் 12 கோடியே 33 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் நிதி கிடைத்துள்ளது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

0 Responses to பழம் கனிந்துள்ளது பாலில் எப்போது விழும் என்று தெரியாது: கருணாநிதி