Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த ஜோடியொன்றை அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த இடத்தில் அமைதியான போராட்டமொன்று மனித உரிமை ஆர்வலர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர், சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் காவல் பணியாளர்கள் வெளியேற்றியபோது, அவர்களிடையே நடந்த வாக்குவாதத்தின் வீடியோ காட்சி இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து சுதந்திர சதுக்கத்தில் அமைதிப் போராட்டத்தினை நேற்று நடத்தினர். அங்கே அமர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் 'ஜோடிகள் இங்கு அமர்ந்திருப்பதால் என்ன தவறு', 'இருவர் ஒன்றாக அமர்ந்திருப்பது எப்படி குற்றமாகும்?', 'சுதந்திரத்திற்காக சுதந்திர சதுக்கம்' ஆகிய வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இந்தப் போராட்டம் நடைபெற்றபோது, அங்கு சென்றிருந்த துணை வெளியுறவு அமைச்சர் ஹர்ஷ டி சில்வா அங்கிருந்த காவல் ஊழியர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, சுதந்திர சதுக்கத்தில் காதலர்கள் உள்ளிட்ட ஜோடிகள் உட்காருவதற்கான தடையை அரசு விதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சுதந்திர சதுக்கத்தின் காவல் பணிகளுக்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்த தனியார் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தினை மிளப்பெறுமாறு கலாச்சார அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

0 Responses to சுதந்திர சதுக்கத்தில் பறிக்கப்பட்ட காதலர்களுக்கான சுதந்திரம் மீளளிக்கப்பட்டது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com