வடக்கு, கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்த போதிலும், அங்குள்ள மக்களின் இதயங்களை என்னால் வெல்ல முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வட்டவளை ரொசல்ல கிளிஸ்ன் தோட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ கணேசர் ஆயலத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, "தோட்டத் தொழிலாளர்கள் கடவுளின் மக்கள் என்று கவிஞர் ஒருவர் கூறியுள்ளார். ஆம், ஆன்மீகம் மீது அதிக பற்றுவைத்துள்ளனர். ஆலயங்களைப் பராமரிக்கின்றனர். இவ்வாறு பல நற்பண்புகள் இருக்கின்றன.
எமது ஆட்சியின்போது மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தோம். பாடசாலை அமைப்பு, வீதி அமைப்பு என திட்டங்களைப் பட்டியலிட்டுக் காட்டலாம். தோட்டத்தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால், சிலர் சூழ்ச்சிகள் ஊடாக மக்களை திசை திருப்பிவிட்டனர்.
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றார்கள். இரண்டாயிரத்து 500 ருபா வழங்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்தனர். இவை நடந்துள்ளனவா?
தோட்டத்தொழிலாளர்கள் உட்பட தமிழ் பேசும் மக்களுக்கு அன்று சுதந்திரமாக நடமாடமுடியாத சூழ்நிலை இருந்தது. கொழும்புக்கு வருவதாக இருந்தால் கடும் பாதுகாப்பு நெருக்கடி இருந்தது. காலி வீதியில் மாத்திரம் 25 இடங்களில் சோதிக்கப்படும் நிலை இருந்தது. போரை முடித்து இந்நிலையை மாற்றியமைத்தோம்.
வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை வழங்கினோம். இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தவர்கள், பெரும்பான்மை இனத்தவர்கள் என்று எவரும் இல்லை. நாட்டை நேசிப்பவர்கள், நேசிக்காதவர்கள் என்ற தரப்பினரே இருக்கின்றனர்.
எம்மிடம் இனவாதம் இல்லை. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள். வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்தேன். இன்று பல்கலைக்கழகத்துக்கு வடக்கிலிருந்தே கூடுதல் மாணவர்கள் தெரிவாகின்றனர். ஆனால், வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை வெற்றிகொள்ள முடியாமல்போனது.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு, கிழக்கு மக்களின் இதயங்களை என்னால் வெல்ல முடியவில்லை: மஹிந்த ராஜபக்ஷ