Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னைய அரசாங்கம் செய்தவற்றுக்கு இந்த அரசாங்கம், கூட்டு எதிரணியைக் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றது. ஆனால், முன்னை செயல்களை நான் தனியாகச் செய்யவில்லை. அவற்றை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அங்கம் வகித்த அமைச்சரவையும் சேர்ந்தே செய்தது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியலில் அண்மையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய அரசாங்கம் செய்தவை தொடர்பிலான பொறுப்புகளிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. மக்களை ஏமாற்றுவதற்காக, கூட்டு எதிரணியின் மீது குற்றஞ்சாட்டவும் கூடாது. கூட்டு எதிரணியை எந்தநேரமும் ஏசிக்கொண்டிருப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு வேலைகளை செய்யவேண்டும். மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல, அன்றிருந்த முழு அமைச்சரவையும் பொறுப்பு கூறவேண்டும். மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பு கூறவேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to முன்னைய அரசாங்கத்தின் செயல்களுக்கு நான் மட்டும் பொறுப்பாளியல்ல: மஹிந்த ராஜபக்ஷ

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com