கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் நீதிமன்றத்தில் உள்ள எதிராளிகள் கூண்டில் நிறுத்தப்படவில்லை என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கும் அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டம் காரணமாக இந்த கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார். அத்துடன், அவர்களுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சந்தேகநபர்களுக்கு தகுந்த சிகிச்சையை பெற்றுக்கொடுக்குமாறு உத்தரவிட்டார் என கைதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கை குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதன்படி சந்தேகநபர்களை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் அவர்கள் தொடர்பாக சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 Responses to உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்தரவு!