வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்படும் 65,000 வீடுகள் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
65,000 வீடுகள் திட்டத்தில் உருக்கு பொருத்து வீடுகளே அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அது, வடக்கு- கிழக்கின் காலநிலைக்கு பொருத்தமானதாக இல்லை என்று தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்தத் திட்டம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டு கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு சந்திப்புக்களையும், கூட்டங்களையும் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களைச் சந்தித்தார். இதன்போதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி பிரேமதாஸவின் காலத்தில் பல வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், பொருத்து வீடுகள் கட்டப்படவில்லை. ஏன் யாழ்ப்பாணத்தில் பொருத்து வீடுகள் கட்டப்பட வேண்டும். ஒரு சாதாரண வீடு கட்டுவதை விட இரண்டு மடங்கு பணம் செலவிடப்பட வேண்டியுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் போது, குறித்த 65 ஆயிரம் வீடுகள் குறித்து பரிசீலிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஊடகங்களில் செய்திகளை பார்த்தோம். எமது கருத்துக்களை ஜனாதிபதிக்கு முன்வைத்து அந்த 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்த மீள் பரிசீலணைக்குட்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.” என்றுள்ளார்.

0 Responses to 65,000 வீடுகள் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம்: சம்பந்தன்