Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும், தொடர்ந்தும் வடக்கில் இராணுவம் நிலை கொண்டிருப்பதற்கு பின்னால், சிங்களக் குடியேற்றங்களை நிறுவி வடக்கில் பௌத்தத்தை நிலைநிறுத்தும் வேலைத்திட்டமொன்று காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேம்மசந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளதாவது, “ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கூட வடக்கில் 15 டிவிசன் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். ஒரு மாவட்டத்தில் 3 டிவிசன் இராணுவத்தினர் வீதம் 5 மாவட்டங்களிலும், ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.

இவ்வாறு இராணுவம் வடக்கில் நிலை கொண்டிருப்பதற்கு காரணம் சிங்கள குடியேற்றங்களை அச்சமின்றி மேற்கொள்ளவும், பௌத்த மதத்தினை நிலை நிறுத்தவுமே.

இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் பலர் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக வடக்கில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றினால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் என கூறுகின்றார்கள். அவர்கள் எந்த பாதுகாப்பு விடயத்தை கருத்தில் கொண்டு அவ்வாறு கூறுகின்றார்கள் புலிகள் மீண்டு எழுவார்கள் என்ற பயமா அல்லது வெளிநாட்டு படைகள் படையெடுக்கும் என்ற பயமா? என அவர்கள் தெளிவாக கூறவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டு தமிழ் மக்களுக்கு எதிரான செயல்களை இந்த அரசாங்கமும் செய்கின்றது. கடந்த அரசாங்கம் விட்டு சென்ற திட்டங்களை இந்த அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கின்றது. மணலாறு பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீக விவசாய காணிகளை சட்டத்திற்கு புறம்பான முறையில், சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று, முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதரங்களை தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மீனவர்கள் அழிக்கின்றார்கள். அதனை கேட்க சென்ற கிராம சேவையாளரை இராணுவத்தினர் தாக்கி விரட்டுகின்றார்கள். முன்னைய அரசாங்கம் வடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டு மக்களின் விகிதாசாரத்தில் மாற்றத்தை கொண்டுவர முயற்சித்தது அதனை இந்த அரசாங்கமும் தொடர்ந்து மேற்கொள்கின்றது.

அதேவேளை, நாடு முழுவது பௌத்த மதத்தினை நிலைநிறுத்தும் செயற்பாட்டில் முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட திட்டத்தினை இந்த அராசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கின்றது. பௌத்தர்களே இல்லாத வடக்கில் முல்லைத்தீவில், முருங்கனில், வவுனியாவில், மாங்குளத்தில், மன்னாரில் பௌத்த விகாரைகளை கண்டுகின்றார்கள். அதன் மூலம் முழு இலங்கையிலும் பௌத்த மதத்தினை நிலை நிறுத்த முயற்கின்றார்கள்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவத்தை கொண்டு வடக்கில் பௌத்த மதத்தை நிறுவ முயற்சி: சுரேஷ்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com